/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஏசி' டவுன் பஸ் சேவை 24ம் தேதி துவக்கம்
/
'ஏசி' டவுன் பஸ் சேவை 24ம் தேதி துவக்கம்
ADDED : அக் 20, 2025 10:37 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 24ம் தேதி முதல் நகரப் பகுதிகளில் மின்சார 'ஏசி' பஸ் சேவை துவங்குகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில், 10 'ஏசி' பஸ்களும் அடக்கம்.
இந்த எலக்ட்ரிக் பஸ்களுக்கு ரூ. 4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் மறைமலை அடிகள் சாலையில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இ-பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும், அதில் டிக்கெட் கலெக் ஷன் செய்யும் பணியை மட்டும் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் செய்வர்.
பஸ் இயக்கும் தனியார் நிறுவனத்திற்கு அரசு அதற்கான தொகை கொடுத்து விடும்.
அதன்படி ஏ.சி., பஸ் ஒரு கி.மீ., துாரம் இயங்க 63.8 ரூபாயும், ஏ.சி., வசதி இல்லாத பஸ் ஒரு கி.மீ, துாரம் இயங்கினால் 62 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த 25 இ-பஸ்களின் சேவை வரும் 24ம் தேதி முதல் நகர பகுதியில் இயக்கப்பட உள்ளது.
அன்றே, நகராட்சி சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 38 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் வழங்கப்படவுள்ளது.

