/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மன் கீ பாத்' நிகழ்ச்சி 29ம் தேதி ஒலிபரப்பு
/
'மன் கீ பாத்' நிகழ்ச்சி 29ம் தேதி ஒலிபரப்பு
ADDED : ஜூன் 25, 2025 01:15 AM
புதுச்சேரி, : பிரதமர் மோடியின் 'மன் கீ பாத்' நிகழ்ச்சி வரும் 29ம் தேதி வானொலியில் ஒலிபரப்பாகிறது.
இது குறித்து புதுச்சேரி வானொலி நிகழ்ச்சிப்பிரிவுத் தலைவர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் மோடி 'மன் கீ பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் வானொலி வழியாக ஊரையாடும் நிகழ்ச்சி வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு ஒலிபரப்பாகும். இதனைத் தொடர்ந்து உடனடியாக 'மன் கீ பாத்' நிகழ்ச்சியின் தமிழ் மொழிபெயர்ப்பு 'மனதின் குரல்' ஒலிபரப்பாகும்.
இந்த 'மன் கீ பாத்' நிகழ்ச்சியின் தமிழ் மொழிபெயர்ப்பு 'மனதின் குரல்' மீண்டும் அன்று இரவு 8:00 மணிக்கு மறுஒலிபரப்பாகும். இந்த இரு நிகழ்ச்சிகளும் புதுச்சேரி அகில இந்திய வானொலியின் மத்திய அலை 1215 கிலோ ெஹர்ட்ஸ் மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ெஹர்ட் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.