/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நரிக்குறவர் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்
/
நரிக்குறவர் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 20, 2025 10:46 PM

புதுச்சேரி: தீபாவளியை முன்னிட்டு சபாநாயகர் செல்வம், நரிக்குறவர் குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, சபாநாயகர் செல்வம் நேற்று, இ.சி.ஆர்., கிருஷ்ணா நகரில் உள்ள ஜாலி ஹோம்ஸ் நரிக்குறவர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, குழந்தைகளுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார். மேலும், பாதுகாப்பு மையத்தில் தங்கி, பி.எஸ்சி., நர்சிங் முடித்துள்ள குஷ்பூ என்ற பெண்ணிற்கு, சுகாதார துறையில் நர்சிங் வேலை வழங்க முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அரசியல் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் இது போன்ற காப்பகங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் ஆதரவற்றவர்களுடன் தீபாவளி கொண்ட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

