ADDED : அக் 20, 2025 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடல் மற்றும் ஆறுகள் பாதுகாப்பு குழு சார்பில், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை பகுதியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வனத்துறை அதிகாரிகள் சிவக்குமார், கார்த்திகேயன் அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு, பனை விதை, மரக்கன்று நட்டு வைத்தனர்.
கடல் மற்றும் ஆறுகள் பாதுகாப்பு குழு சங்கத் தலைவர் தனஞ்செயன், கவுரவத் தலைவர் கோவிந் தசாமி, பொதுச்செயலாளர் மதுரை முத்து, பொருளாளர் மணிகண்டன் உட்பட நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.
கடற்கரை ஓரப்பகுதியில், 3 ஆயிரம் பனை விதை கள் மற்றும் நுாறு மரக் கன்றுகளும் நடப்பட்டது.

