ADDED : அக் 20, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
பாகூர் அடுத்த கரையாம்புத்துார் பேட் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னதம்பி,56; கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில், தனது அண்ணன் மகன் விஜயசேகரன் வீட்டில் வசித்து வந்தார். இவர் கடந்த 18ம் தேதி மதியம், மாடி படிக்கட்டிலிருந்து இறங்கும்போது தவறி விழுந்து இறந்தார்.
விஜயசேகரன் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

