/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக அரசு டாக்டர் புதுச்சேரியில் தற்கொலை
/
தமிழக அரசு டாக்டர் புதுச்சேரியில் தற்கொலை
ADDED : அக் 20, 2025 10:44 PM
புதுச்சேரி: திருவண்ணாமலை அரசு டாக்டர், புதுச்சேரியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை, குபேரன் நகரை சேர்ந்தவர் நாகராஜன் மகன் விஜயகுமார், 31. இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியபடி, எம்.எஸ்., மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், விஜயகுமார் எம்.எஸ்., இறுதி ஆண்டு படிப்பு மிகவும் கடினமாக இருப்பதாக, கால்நடை மருத்துவரான அவரது மனைவி பிரீத்தியிடம் தெரிவித்து வந்துள்ளார்.
கடந்த 10ம் தேதி வேலை தொடர்பாக சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு வந்த விஜயகுமார், புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 13ம் தேதி அவரது அண்ணனை மொபைலில் தொடர்பு கொண்ட விஜயகுமார், புதுச்சேரியில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புதுச்சேரி வந்த அவரது உறவினர்கள், விஜயகுமாரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி பிரீத்தி அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

