/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேறும், சகதியுமான சாலை: மதிக்கிருஷ்ணாபுரம் மக்கள் அவதி
/
சேறும், சகதியுமான சாலை: மதிக்கிருஷ்ணாபுரம் மக்கள் அவதி
சேறும், சகதியுமான சாலை: மதிக்கிருஷ்ணாபுரம் மக்கள் அவதி
சேறும், சகதியுமான சாலை: மதிக்கிருஷ்ணாபுரம் மக்கள் அவதி
ADDED : அக் 20, 2025 10:21 PM

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரத்தில் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியதால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பாகூர் தொகுதி, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் தார் சாலை, குடிநீர், தெருமின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில், புதிதாக உருவான காந்தி நகர் மற்றும் அதனையொட்டிய குடியிருப்பு பகுதியில் தற்போது ஏராளமான வீடுகள் உருவாகி உள்ளன. இப்பகுதியில், சாலை, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து,முதற்கட்டமாக, கிராவல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், சரியான முறையில் மண் சமன் செய்யாமல், நீண்ட நாட்களாக பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது.
தற்போது, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அவ்வழியாக செல்லும் பொது மக்கள் வழுக்கி விழுந்து சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, மதிக்கிருஷ்ணாபுரத்தில், மண் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

