/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
புதிய கேப்டன் ரோகித் சர்மா * இங்கிலாந்து தொடரில் குழப்பம்
/
புதிய கேப்டன் ரோகித் சர்மா * இங்கிலாந்து தொடரில் குழப்பம்
புதிய கேப்டன் ரோகித் சர்மா * இங்கிலாந்து தொடரில் குழப்பம்
புதிய கேப்டன் ரோகித் சர்மா * இங்கிலாந்து தொடரில் குழப்பம்
ADDED : மார் 27, 2025 10:50 PM

புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா நியமிக்கப்படலாம்.
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 45 நாள் நடக்கும் இத்தொடரின் முதல் டெஸ்ட் ஜூன் 20-24ல் லீட்சில் நடக்கும். அடுத்த நான்கு போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2-6), லார்ட்ஸ் (ஜூலை 10-14), மான்செஸ்டர் (ஜூலை 23-27), ஓவலில் (ஜூலை 31-ஆக. 4) நடக்க உள்ளன.
சமீபத்தில் இந்திய அணி, நியூசிலாந்து (0-3), ஆஸ்திரேலியாவுக்கு (1-3) எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்தது. தவிர, ஆஸ்திரேலிய தொடரில் 3 டெஸ்டில் 31 ரன் மட்டும் எடுத்தார் கேப்டன் ரோகித் சர்மா. இருப்பினும், அடுத்து நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு கோப்பை வென்று தந்தார்.
இதனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக மீண்டும் ரோகித் சர்மா நியமிக்கப்படலாம். 'சீனியர்' கோலி, இந்திய அணியில் இடம் பெறலாம். இவர்கள் இருவரும், டெஸ்ட் தொடருக்கு முன் நடக்கவுள்ள இரண்டு பயிற்சி போட்டியில் (தலா 4 நாள்) பங்கேற்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை கேப்டன் பதவி குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படாத பட்சத்தில், இங்கிலாந்து தொடரில் இருந்து ரோகித் விலகலாம்.
யார் கேப்டன்
வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும், முதுகுப்பகுதி காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. ரோகித் சர்மா விலகினால், சுப்மன் கில் அல்லது ரிஷாப் பன்டுக்கு வாய்ப்பு செல்லும். இவர்களுக்கு கேப்டன் பணியில் போதிய அனுபவம் இல்லை என்பதால் குழப்பம் நீடிக்கிறது.