sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

'நாக்-அவுட்' சுற்றில் செல்சி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

/

'நாக்-அவுட்' சுற்றில் செல்சி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

'நாக்-அவுட்' சுற்றில் செல்சி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

'நாக்-அவுட்' சுற்றில் செல்சி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்


ADDED : ஜூன் 25, 2025 10:18 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 10:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிலாடெல்பியா: கிளப் உலக கோப்பை கால்பந்து 'நாக்-அவுட்' சுற்றுக்கு செல்சி அணி முன்னேறியது.

அமெரிக்காவில், உலகின் முன்னணி கிளப் அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

பிலாடெல்பியாவில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் செல்சி (இங்கிலாந்து), எஸ்பெரன்ஸ் டி துனிஸ் (துனிசியா) அணிகள் மோதின. இதில் செல்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), பிளமெங்கோ (பிரேசில்) அணிகள் மோதிய மற்றொரு 'டி' பிரிவு லீக் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. முடிவில் 'டி' பிரிவில் முதலிரண்டு இடங்களை உறுதி செய்த பிளமெங்கோ (7 புள்ளி), செல்சி (6) அணிகள் 'ரவுண்டு-16' போட்டிக்குள் நுழைந்தது. டி துனிஸ் (3), லாஸ் ஏஞ்சல்ஸ் (1) 'நாக்-அவுட்' வாய்ப்பை இழந்தன.

முனிக் ஏமாற்றம்: சார்லோட்டியில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி), பென்பிகா (போர்ச்சுகல்) அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய பேயர்ன் முனிக் அணி 0-1 என தோல்வியடைந்தது.

ஆக்லாந்து சிட்டி (நியூசிலாந்து), போகா ஜூனியர்ஸ் (அர்ஜென்டினா) அணிகள் மோதிய மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. முடிவில் 'சி' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த பென்பிகா (7 புள்ளி), பேயர்ன் முனிக் (6) அணிகள் 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறின.






      Dinamalar
      Follow us