/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இன்டர் மிலன் அணி அசத்தல்: 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி
/
இன்டர் மிலன் அணி அசத்தல்: 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி
இன்டர் மிலன் அணி அசத்தல்: 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி
இன்டர் மிலன் அணி அசத்தல்: 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி
ADDED : ஜூன் 26, 2025 10:23 PM

சியாட்டில்: கிளப் உலக கோப்பை கால்பந்து 'நாக்-அவுட்' சுற்றுக்கு இன்டர் மிலன் அணி முன்னேறியது.
அமெரிக்காவில், உலகின் முன்னணி கிளப் அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. சியாட்டிலில் நடந்த 'இ' பிரிவு லீக் போட்டியில் இன்டர் மிலன் (இத்தாலி), ரிவர் பிளேட் (அர்ஜென்டினா) அணிகள் மோதின. இதில் இன்டர் மிலன் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
மற்றொரு 'இ' பிரிவு லீக் போட்டியில் மான்டேரி அணி (மெக்சிகோ) 4-0 என உராவா ரெட் டயமண்ட்ஸ் அணியை (ஜப்பான்) வீழ்த்தியது. முடிவில் 'இ' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த இன்டர் மிலன் (7 புள்ளி), மான்டேரி (5) அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தன.
டார்ட்மண்ட் வெற்றி: 'எப்' பிரிவு லீக் போட்டியில் போருசியா டார்ட்மண்ட் (ஜெர்மனி), உல்சன் (தென் கொரியா) அணிகள் மோதின. இதில் டார்ட்மண்ட் அணி 1-0 என வெற்றி பெற்றது.மமெலோடி சன்டவுன்ஸ் (தென் ஆப்ரிக்கா), புளுமினென்ஸ் (பிரேசில்) அணிகள் மோதிய
மற்றொரு 'எப்' பிரிவு போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. முடிவில் 'எப்' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த டார்ட்மண்ட் (7 புள்ளி), புளுமினென்ஸ் (5) அணிகள் 'ரவுண்டு-16' போட்டிக்கு தகுதி பெற்றன.
பிரேசில் ஆதிக்கம்
இத்தொடரில் பங்கேற்கும் பிரேசிலை சேர்ந்த பிளாமெங்கோ, பால்மீராஸ், போடா போகோ, புளுமினென்ஸ் என 4 கிளப் அணிகளும் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறின. 'ரவுண்டு-16' போட்டியில் பால்மீராஸ், போடா போகோ அணிகள் மோதுவதால், ஒரு பிரேசில் கிளப் அணி காலிறுதிக்கு செல்வது உறுதியானது.