/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடம்பாடி பள்ளியில் நுாற்றாண்டு விழா
/
கடம்பாடி பள்ளியில் நுாற்றாண்டு விழா
ADDED : மார் 28, 2025 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், கடந்த 1924ம் ஆண்டும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது.
1985ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இயங்கி வருகிறது.
பள்ளி துவக்கப்பட்டு, தற்போது நுாறாண்டுகள் கடந்த நிலையில், நேற்று நுாற்றாண்டு விழா கொண்டாடினர்.
விழாவிற்கு, கடம்பாடி ஊராட்சித் தலைவர் தேன்மொழி தலைமை வகித்து, இவ்விழா சுடரை ஏற்றினார். தலைமையாசிரியை ரமணி, ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ - மாணவியர் நுாற்றாண்டு விழா உறுதிமொழி ஏற்றனர்.
பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவ குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். ஊராட்சித் தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார்.