/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மருத்துவமனையில் 'பாதம் காப்போம்' பிரிவு துவக்கம்
/
செங்கை மருத்துவமனையில் 'பாதம் காப்போம்' பிரிவு துவக்கம்
செங்கை மருத்துவமனையில் 'பாதம் காப்போம்' பிரிவு துவக்கம்
செங்கை மருத்துவமனையில் 'பாதம் காப்போம்' பிரிவு துவக்கம்
ADDED : மார் 25, 2025 09:54 PM
செங்கல்பட்டு:அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 'பாதம் பாதுகாப்போம்' மருத்துவ பிரிவு, நேற்று துவக்கப்பட்டது.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீரிழிவு பாத மருத்துவ திட்டம், பாதம் காப்போம் திட்டம், சட்டசபையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.
அதன்படி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பாத காப்போம் மருத்துவ பிரிவை, மருத்துவமனை முதல்வர் சிவசங்கர், நேற்று துவக்கி வைத்தார்.
இதில், கண்காணிப்பாளர் ஜோதிகுமார், பொது அறுவை சிகிச்சை தலைவர் வி.டி.அரசு உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
அதன் பின், 'மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக, நீரிழிவு பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கும், பாத பாதிப்புகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்' என, மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.