/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி துவக்கம்
/
புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மார் 25, 2025 09:54 PM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மின்வாரிய கோட்டத்தில், புதிதாக மூன்று மின்மாற்றிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மின்வாரிய கோட்டத்தில், செங்கல்பட்டு அடுத்த திருமணி, நடுவக்கரை, நென்மேலி ஆகிய பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.
இப்பகுதியில் மின் அழுத்த குறைபாடு ஏற்படுவதால், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை தவிர்க்க, வீடுகளுக்கு தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன் பின் திருமணி, நென்மேலி, நடுவக்கரை ஆகிய பகுதிகளில், புதிதாக 65 'கேவி' திறன் கொண்ட மின்மாற்றிகள், தலா 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க மின்வாரியம் உத்தரவிட்டது.
தற்போது, மின்மாற்றி பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்தில், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.