/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறையில் 'ஹீலியம் காஸ்' நிரப்பி பட்டதாரி இளைஞர் தற்கொலை
/
அறையில் 'ஹீலியம் காஸ்' நிரப்பி பட்டதாரி இளைஞர் தற்கொலை
அறையில் 'ஹீலியம் காஸ்' நிரப்பி பட்டதாரி இளைஞர் தற்கொலை
அறையில் 'ஹீலியம் காஸ்' நிரப்பி பட்டதாரி இளைஞர் தற்கொலை
ADDED : மார் 25, 2025 09:55 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்துார் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் ஹரிராம்நாராயணன்,25. பி.சி.ஏ., பட்டதாரியான இவர், சென்னை போரூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
இதே நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், ஆறு மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.
இதன் காரணமாக ஹரிராம்நாராயணன் மன வருத்தத்தில் இருந்து உள்ளார்.
நேற்று முன்தினம் காலை, 'ஹீலியம் காஸ்' சிலிண்டரை வீட்டிற்கு வாங்கி வந்த இவர்,
நேற்று முன்தினம் மாலை, வீட்டின் முதல் தளத்தில் உள்ள தன் அறையின் கதவு, ஜன்னல்களை மூடி விட்டு, ஹீலியம் காஸை திறந்து விட்டு உள்ளார்.
நீண்ட நேரமாக ஹரிராம்நாராயணன் வெளியே வராததால், பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது, அவர் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.