/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொகுசு காரில் குட்கா சப்ளை வியாபாரி கைது
/
சொகுசு காரில் குட்கா சப்ளை வியாபாரி கைது
ADDED : ஜன 09, 2024 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, புழல் தேசிய நெடுஞ்சாலை, நாகாத்தம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் இரவு, புழல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த 'ஹோண்டா சிட்டி' காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 70 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸ் பொருட்கள் சிக்கின. அவற்றின் மதிப்பு, 1 லட்சம் ரூபாய்.
போலீசார் விசாரணையில், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாரிசெல்வம், 28, என்பவர், 'பிஸ்கட்' என்ற சங்கேத பெயரில், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை, ஆன்லைனில் ஆர்டர் பெற்று, காரில் சென்று வினியோகம் செய்வது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

