/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு விறுவிறு புது கால்நடை மருந்துகள், தடுப்பூசி வாங்க அவசியம்
/
செங்கை மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு விறுவிறு புது கால்நடை மருந்துகள், தடுப்பூசி வாங்க அவசியம்
செங்கை மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு விறுவிறு புது கால்நடை மருந்துகள், தடுப்பூசி வாங்க அவசியம்
செங்கை மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு விறுவிறு புது கால்நடை மருந்துகள், தடுப்பூசி வாங்க அவசியம்
ADDED : மார் 25, 2025 06:25 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 21வது கால்நடை கணக்கெடுப்பு, பிப்ரவரி மாதம் துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய வட்டாரங்கள் உள்ளன.
மாவட்டத்தில், செங்கல்பட்டு, சிட்லப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் 61, கால்நடை கிளை மருந்தங்கள் 24 உள்ளன.
இங்கு மாடு, எருமை, நாய், பன்றி, கோழி, வாத்து உள்ளிட்ட அனைத்து வகையான கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மத்திய அரசின் சார்பில், கால்நடை பராமரிப்பு துறை வாயிலாக, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதைத்தொடர்ந்து, 2019ம் ஆண்டு, 20வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களில், 4 லட்சத்து 1,543 கால்நடைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதன் பின், கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துகளை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்கின்றன. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை, கலெக்டர் அருண்ராஜ், கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி துவக்கி வைத்தார். மாவட்டத்தில் துவங்கிய கணக்கெடுப்பு, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
இப்பணியில், தன்னார்வலர்கள் 113 பேர் மற்றும் கால்நடைத்துறை பணியாளர்கள் 47 பேர் என, 160 பேர் மற்றும் மேற்பார்வையாளர்கள், டாக்டர்கள் 34 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள், கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடைகள் தொடர்பான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலனுக்காக சரியான தரவுகள் தருவதற்காக, கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுவரை, 85 சதவீதம் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது.
இதில் வீடுகள், கடைகள், தோட்டம், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும்.
இந்த கணக்கெடுப்பின் போது, கால்நடைகள் விபரங்களை, பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மத்திய அரசால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு நடத்துவதால், கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் வாங்க முடியும். கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்வு, புதிய கிளை நிலையங்கள் ஏற்படுத்தலாம். இதுவரை, 85 சதவீதம் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது.
- கால்நடைத்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு மாவட்டம்.