/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2 பயணியர் ரயில்கள் திடீர் ரத்தால் அவதி
/
2 பயணியர் ரயில்கள் திடீர் ரத்தால் அவதி
ADDED : ஜூன் 25, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, கடற்கரை - விழுப்புரம், தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள், நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.
சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு, நேரடி பயணியர் ரயில்கள் மிகவும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரம் - விழுப்புரத்திற்கு காலை 9:45 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு, மதியம் 1:40 மணிக்கும், பயணியர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களின் சேவை, நேற்று காலை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணியர் கடும் அவதியடைந்தனர்.