/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
/
கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜன 20, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி,
வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 35. சகோதரியுடன் வசித்து வந்தார்.
இவர், வேளச்சேரி ஏரியில் துாண்டில் போட்டு மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார்.
ஏரிக்குள் ஒரு கிணறு உள்ளது. அதன் கரையில் அமர்ந்து, நேற்று முன்தினம் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, கால் தடுக்கி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினார்.
அதன்பின், ஆழ்கடல் இறங்கும் பயிற்சி பெற்ற வீரர்கள் நீரில் மூழ்கி, கிருஷ்ணன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

