/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது மாஞ்சா நுால் விற்பனைக்கு தடை நீட்டிப்பு
/
பொது மாஞ்சா நுால் விற்பனைக்கு தடை நீட்டிப்பு
ADDED : ஜூன் 25, 2025 12:19 AM
சென்னை, சென்னையில், மாஞ்சா நுால் தயாரிக்கவும், விற்கவும், ஏற்கனவே அமலில் இருந்த தடை, இரண்டு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை மற்றும் புறநகர் பகுதியில், மாஞ்சா நுால் பயன்படுத்தி காற்றாடிகள் விட, ஏற்கனவே தடை அமலில் உள்ளது.
இந்த தடை வரும், ஆக., 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், மாஞ்சா நுால் பயன்படுத்தி பட்டம் விடுவோர், தயாரித்து விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஆளில்லா விமானம், டிரோன்கள், ஹாட் ஏர் பலுான்கள் பறக்கவிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.