/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கலங்கரை விளக்கம் - போட் கிளப் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்
/
கலங்கரை விளக்கம் - போட் கிளப் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்
கலங்கரை விளக்கம் - போட் கிளப் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்
கலங்கரை விளக்கம் - போட் கிளப் சுரங்கம் தோண்டும் பணி துவக்கம்
ADDED : ஜன 19, 2024 12:34 AM

சென்னை, கலங்கரை விளக்கத்தில் இருந்து போட் கிளப் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்க இரண்டாவது கனரக இயந்திரம் பணியை நேற்று துவங்கியது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது, 'கழுகு' என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், கலங்கரை விளக்கம் நிலையத்தில் இருந்து திருமயிலை நோக்கி வெற்றிகரமாக சுரங்கம் தோண்டும் பணியைத் துவங்கியது. இந்த இயந்திரம் 2026ம் ஆண்டு அக்., மாதத்தில் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.