/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில சின்னங்களுடன் ஜொலிக்கும் ரேடியல் சாலை மேம்பால பூங்கா
/
மாநில சின்னங்களுடன் ஜொலிக்கும் ரேடியல் சாலை மேம்பால பூங்கா
மாநில சின்னங்களுடன் ஜொலிக்கும் ரேடியல் சாலை மேம்பால பூங்கா
மாநில சின்னங்களுடன் ஜொலிக்கும் ரேடியல் சாலை மேம்பால பூங்கா
ADDED : மார் 26, 2025 12:18 AM

சென்னை, துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலை, 200 அடி அலகம், 10.5 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலையில், ஈச்சங்காடு சந்திப்பில், 82 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டி, 2021ம் ஆண்டு திறக்கப்பட்டது.
பாலத்தின் கீழ் பகுதியில், பல்லாவரம் - துரைப்பாக்கம் நோக்கி செல்லும் திசையில், பேருந்து நிறுத்தத்தை ஒட்டி, ஒன்பது பில்லர்கள் இடையே, 650 அடி நீளம், 20 அடி அகலத்தில் காலி இடம் உள்ளது.
புதராக கிடந்த இந்த இடத்தை அழகுபடுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு விட, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
இதற்காக, 1.20 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது. இதில், 5 அடி அகல நடைபயிற்சி பாதையுடன், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஏர்க்கலப்பை, யாழி ஆகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மரகதப்புறா, நீலகிரி வரையாடு, பனைமரம், கபடி, அல்லி, பலாப்பழம், பட்டாம்பூச்சி ஆகிய மாநில சின்னங்கள் துாண்களில் வரையப்பட்டுள்ளன.
மேலும், புல் தரை, செடிகள், சொட்டு நீர் பாசன வசதி, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வசதி, பயணியர் காத்திருப்பு இருக்கை உள்ளிட்ட வசதிகளும் அமைந்துள்ளன.
ஓரிரு நாட்களில், இந்த பூங்கா பயன்பாட்டுக்கு வர உள்ளது. எதிர் திசையில் உள்ள காலி இடங்களிலும், இதேபோல் பூங்கா அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.