/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.டி.எஸ்., மருத்துவமனையில் 'ரோபோடிக்' முழங்கால் சிகிச்சை
/
சி.டி.எஸ்., மருத்துவமனையில் 'ரோபோடிக்' முழங்கால் சிகிச்சை
சி.டி.எஸ்., மருத்துவமனையில் 'ரோபோடிக்' முழங்கால் சிகிச்சை
சி.டி.எஸ்., மருத்துவமனையில் 'ரோபோடிக்' முழங்கால் சிகிச்சை
ADDED : ஜூன் 28, 2025 01:33 AM
சென்னை:சி.டி.எஸ்., சிறப்பு மருத்துவமனையில் ரோபோடிக் முழங்கால் அறுவை சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரில் உள்ள, சி.டி.எஸ்., சிறப்பு மருத்துவமனையில், ரோபோடிக் முழங்கால் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு பராமரிப்பு மையத்தை, அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ., மோகன் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரகாஷ் செல்வம் கூறியதாவது:
அதிநவீன தொழில்நுட்பங்கள் உதவியுடன், முழங்கால் அறுவை சிகிச்சை செய்யும்போது, மிக துல்லியமாக இருக்கும். நோயாளிகளின் தனித்துவமான எலும்புகளின் அமைப்பிற்கு ஏற்றவாறு அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமின்றி, இடுப்பு மாற்று மற்றும் மூட்டு மறுகட்டமைப்பு போன்ற சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.