/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மோசடி செய்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மனைவி, மகன் கைது
/
மோசடி செய்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மனைவி, மகன் கைது
மோசடி செய்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மனைவி, மகன் கைது
மோசடி செய்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மனைவி, மகன் கைது
ADDED : ஜன 24, 2024 12:41 AM
வில்லிவாக்கம், வில்லிவாக்கத்தில் இயங்கிய, 'குபேரன் அறக்கட்டளை' என்ற தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகை, நிலம் சேமிப்பு திட்டம் என, பல்வேறு திட்டங்கள் கவர்ச்சிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிறுவனத்தை ரங்கா ரெட்டி, அவரது மனைவி ஜெயலட்சுமி, மகன்கள் ஹேம்நாத், வேகேஷ் உள்ளிட்டோர் நடத்தினர். நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பி, ஏராளாமானோர் பணத்தை முதலீடு செய்தனர். கடந்த டிச. மாதம் பல கோடி ரூபாயுடன், குபேரன் அறக்கட்டளை நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.
வில்லிவாக்கம் காவல் நிலையம், சென்னை கமிஷனர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலங்களில் இது குறித்து பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர்.
விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு, நெற்குன்றம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், ரங்கா ரெட்டியின் மனைவி ஜெயலட்சுமி, 47 மற்றும் மகன் வேகேஷ், 20 ஆகிய இருவரை மக்கள் சிறைப்பிடித்தனர்.
சம்பவம் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், இருவரையும் மீட்டு, வில்லிவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் விசாரித்து, கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ரங்கா ரெட்டி உள்ளிடோரை தேடி வருகின்றனர்.

