/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திட்டம் சார்ந்த பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
/
திட்டம் சார்ந்த பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 25, 2025 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சி பணிகள் நடக்கிறது. இதில், குதிரையாலம்பாளையம், சூலக்கல், நல்லட்டிபாளையம், பனப்பட்டி ஆகிய நான்கு ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், கலைஞர் கனவு இல்லம், நபார்டு, ஊரக வீடுகள் பழுதுபார்ப்பு, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாடு மற்றும் 15வது நிதிக்குழு மானிய திட்ட பணிகளை, கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) நேற்று ஆய்வு செய்தார்.
இதில், கிணத்துக்கடவு ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரத்தினகுமார், விஜய்குமார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனர்.