/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2; இயற்பியல், பொருளியல் தேர்வு ரொம்ப ஈஸி! மாணவ, மாணவியர் உற்சாகம்
/
பிளஸ் 2; இயற்பியல், பொருளியல் தேர்வு ரொம்ப ஈஸி! மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 2; இயற்பியல், பொருளியல் தேர்வு ரொம்ப ஈஸி! மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 2; இயற்பியல், பொருளியல் தேர்வு ரொம்ப ஈஸி! மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : மார் 25, 2025 09:31 PM

- நிருபர் குழு -
பிளஸ் 2, இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வு எளிமையாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 38 மையங்களில் நடத்தப்பட்டது. நேற்று, இறுதியாக, இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டனர்.
தேர்வு குறித்து, ஜோதிநகர் சாந்தி பள்ளி மாணவர்கள் கருத்து:
மித்ரா: இயற்பியல் தேர்வில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. பள்ளி அளவில் நடத்தப்பட்ட திருப்புதல் தேர்வில் இடம்பெற்றிருந்த வினாக்களே அதிகம் கேட்கப்பட்டிருந்தன. இரண்டு மதிப்பெண் வினாக்களும் எளிதாக இருந்தது. சில மூன்று மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதியுள்ளதால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
ஸ்ரீநந்தினி: இயற்பியல் தேர்வில், சில ஒரு மதிப்பெண் வினாக்கள், அறிவு சார்ந்தவையாக இருந்தது. 'நியூமரிக்கல்' வினாக்கள் சற்று அதிகம் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு பாடத்தையும் முறையாக படித்து, ஏற்கனவே பயிற்சி எடுத்திருந்ததால் அனைத்து வினாக்களுக்கும் விரைந்தும் பதில் எழுத முடிந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும்.
பாலஸ்ரீவந்த்: இயற்பியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதில், ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததால், விரைந்து பதில் எழுதினேன். அதேநேரம், கட்டாய வினா சற்று கடினமாக இருந்தாலும், விடையை சரியாக எழுதி விட்டேன். அனைத்து வினாக்களுக்கும் உரிய பதிலை சரியாக எழுதியுள்ளதால், நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
வால்பாறை திருஇருதய மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:
ஜாஸ்மின்: இயற்பியல் தேர்வை பொறுத்தவரை வினாக்கள் எளிதாக கேட்கபட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். ஐந்து மதிப்பெண்களுக்கான வினாக்கள் சில கடினமாக இருந்தன. இருப்பினும் பிற வினாக்கள் எளிமையாக இருந்ததால், விடைகளை திருப்தியாக எழுதியுள்ளேன். அதிக மதிப்பெண் கிடைக்கும்.
கிருத்திகா: பொருளியல் தேர்வு எளிதாக இருந்தது. தேர்வுக்காக பயிற்சி எடுத்து படித்ததாலும், ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களில் இருந்து பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டதாலும், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். ஒரு சில வினாக்கள் கடினமாக இருந்தாலும், பிற வினாக்கள் எளிதாக கேட்கப்பட்டதால், அதிக மதிப்பெண் கிடைக்கும்.
உடுமலை, பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:
லட்சுமகுமார்: இயற்பியல் தேர்வு எளிமையாகவும், எதிர்பார்த்த வினாக்கள் பலவும் கேட்கப்பட்டன. ஒரு மதிப்பெண், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதிகளில் வினாக்கள் பாடத்திலிருந்து நேரடியாக வந்ததால், சுலபமாக விடை எழுதினேன். ஆனால், ஐந்து மதிப்பெண் வினா பகுதியில், கட்டாய வினாவில், கணக்குகள் அதிகம் கேட்கப்பட்டன. இதனால், சிறிது யோசித்து பதிலளிக்க வேண்டியிருந்தது.
சரண்: பொருளியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. அடிக்கடி பயிற்சி செய்த வினாக்கள் என்பதால், விரைவில் விடைகளை எழுத முடிந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் ஒரு சில வினாக்கள் குழப்பும் வகையில் இருந்தது. மற்ற அனைத்து பகுதிகளிலும் வினாக்கள் சுலபமாக கேட்கப்பட்டிருந்தன. இறுதி தேர்வு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.