/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆஸ்திரேலியா கல்வி திருவிழா இன்று சிறப்பு கண்காட்சி
/
ஆஸ்திரேலியா கல்வி திருவிழா இன்று சிறப்பு கண்காட்சி
ஆஸ்திரேலியா கல்வி திருவிழா இன்று சிறப்பு கண்காட்சி
ஆஸ்திரேலியா கல்வி திருவிழா இன்று சிறப்பு கண்காட்சி
ADDED : ஜூன் 19, 2025 11:56 PM
கோவை: ஆஸ்திரேலியா அரசின், கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு கண்காட்சி இன்று நடக்கிறது.ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையம் சார்பில், கோவை ரெஸிடென்சி ஓட்டலில் மதியம், 12:00 முதல் மாலை 5:00 மணி வரை ஆஸ்திரேலியா திருவிழா எனும் பெயரில் கண்காட்சி நடக்கிறது.
இதில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், பிரீமியம் உணவு மற்றும் குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.இந்தக் கண்காட்சி, இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேசவும், அவர்களின் தொழில் அல்லது கற்றல் இலக்குகளை அடைய உதவும் பாடநெறி சலுகைகள் குறித்து விவாதிக்கவும், ஒரு வாய்ப்பை வழங்குகிறது.அந்நாட்டு பல்கலைகளின் பிரதிநிதிகளுடன் நேரடியாக பேச முடியும்.
கல்வி மற்றும் தொழில் வல்லுநர்களின் நேரடித் தகவல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. மேலும் விபரங்களுக்கு, 93110 11380 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.