/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்டங்களுக்கு இடையே கிரிக்கெட் கோவை, நெல்லை அணிகள் அபாரம்
/
மாவட்டங்களுக்கு இடையே கிரிக்கெட் கோவை, நெல்லை அணிகள் அபாரம்
மாவட்டங்களுக்கு இடையே கிரிக்கெட் கோவை, நெல்லை அணிகள் அபாரம்
மாவட்டங்களுக்கு இடையே கிரிக்கெட் கோவை, நெல்லை அணிகள் அபாரம்
ADDED : ஜூன் 19, 2025 11:56 PM

கோவை : Lதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது. சி-மண்டல போட்டியில், 37 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் விளையாடி வருகின்றன. தஞ்சை அணியும், கோவை அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த தஞ்சை அணி, 43.3 ஓவரில், 104 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் சைமன் மேத்யூ ஐந்து விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய கோவை அணி, 27 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 105 ரன்கள் எடுத்தது. வீரர் விவான் நரேன், 49 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
நீலகிரி மாவட்ட அணியும், திருநெல்வேலி அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த நீலகிரி அணி, 28 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 49 ரன்கள் எடுத்தனர். எதிரணி வீரர்க அபிநவ் கணேஷ் ஐந்து விக்கெட்களும், எட்வின் ஜோஸ்வா மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.
திருநெல்வேலி அணியினரோ, 14.5 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 50 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.