/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் சுவாமி சிலைகளை உடைத்தவழக்கு கட்டட தொழிலாளி சிறையில் அடைப்பு
/
கோவையில் சுவாமி சிலைகளை உடைத்தவழக்கு கட்டட தொழிலாளி சிறையில் அடைப்பு
கோவையில் சுவாமி சிலைகளை உடைத்தவழக்கு கட்டட தொழிலாளி சிறையில் அடைப்பு
கோவையில் சுவாமி சிலைகளை உடைத்தவழக்கு கட்டட தொழிலாளி சிறையில் அடைப்பு
ADDED : ஜூன் 25, 2025 03:11 AM

சூலூர்:கோவை அருகே கோவிலில் சுவாமி சிலைகளை உடைத்த வழக்கில், கட்டட தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சின்னியம்பாளையம் அவிநாசி ரோட்டில், பழமையான பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 17 ம்தேதி இரவு, கோவில் வளாகத்தில் இருந்த விநாயகர் மற்றும் நாகர் சிலைகளை மர்ம நபர் உடைத்து சேதப்படுத்தினான். இதேபோல், கரையாம் பாளையம் ரோட்டில் உள்ள கோவிலில், கன்னிமார் சிலையை அந்நபர் சேதப்படுத்தியது தெரிந்தது.
இதுகுறித்து, சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அருகில் உள்ள சி.சி.டி.வி., காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, குற்றவாளியை அடையாளம் கண்டனர். கட்டட தொழிலாளியான அவனது செல்போன் எண்ணை கொண்டு, பீகார் மாநிலத்தை சேர்ந்த கரண் குமார், 32 என்பதை கண்டுபிடித்தனர். தெலுங்கானா மாநிலத்தில் பதுங்கி இருப்பதையும் கண்டு பிடித்தனர். எஸ்.ஐ., சிவக்குமார், எஸ்.எஸ்.ஐ., மகாராஜன் மற்றும் போலீசார், அங்கு சென்று கரண் குமாரை கைது செய்து சூலூர் அழைத்து வந்தனர்.
விசாரணையில், கட்டட தொழிலாளியான தான், சம்பவத்தன்று இரவு, மது போதையில் கோவிலுக்கு சென்றதாகவும், குடிக்க தண்ணீரை தேடியபோது, கிடைக்காததால், ஆத்திரமடைந்து சுவாமி சிலைகளை உடைத்து விட்டு, அருகில் உள்ள காட்டில் படுத்து தூங்கியதாகவும், காலையில் பார்த்தபோது, கோவில் அருகே போலீசார் மற்றும் பொதுமக்கள் இருந்ததால், அச்சமடைந்து சொந்த ஊருக்கு தப்பியதாகவும், கரண் குமார் கூறியுள்ளான். இதையடுத்து, அவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.