/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்ட மத்திய அரசுக்கு மாணவர்கள் நன்றி
/
இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்ட மத்திய அரசுக்கு மாணவர்கள் நன்றி
இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்ட மத்திய அரசுக்கு மாணவர்கள் நன்றி
இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்ட மத்திய அரசுக்கு மாணவர்கள் நன்றி
ADDED : ஜூன் 25, 2025 03:19 AM

கோவை:இஸ்ரேல், ஈரான் போருக்கு நடுவில், இஸ்ரேலில் தங்கி படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள், பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஈரான் - இஸ்ரேல் இடையே, கடும் போர் நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு உயர்கல்விக்காக சென்ற மாணவர்களை, பத்திரமாக மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த, ஐந்து மாணவர்கள் விமானம் வாயிலாக, நேற்று பத்திரமாக கோவை வந்தடைந்தனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் மருதுபாண்டி, கோவையைச் சேர்ந்த விமல், ஆதித்யா, அபர்ணா, ரஞ்சித் ஆகிய இந்த ஐந்து பேரும், நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.
கடும் போர் சூழலுக்கு மத்தியில், தங்களை பத்திரமாக மீட்டு, தாய்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு, இம்மாணவர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.