/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பரை கொள்முதல்; விவசாயிகள் கோரிக்கை
/
கொப்பரை கொள்முதல்; விவசாயிகள் கோரிக்கை
ADDED : மார் 25, 2025 09:51 PM
சூலுார்; 'கொப்பரை கொள்முதல் துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூலுார், சுல்தான்பேட்டையில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தற்போது, தேங்காய், கொப்பரை விலை உயர்ந்தாலும், நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதம் தமிழகத்தில் தேங்காய் சீசனாக உள்ளது. இம்மாதங்களில் உற்பத்தியாகும் தேங்காய் மற்றும் கொப்பரை வெளி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படும். அதனால், கொப்பரை கொள்முதலை அரசு துவக்க வேண்டும், என, தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது:
சீசன் துவங்கியுள்ள நிலையில் கொப்பரை, தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. சாதா கொப்பரை ஒரு கிலோவுக்கு,143 ரூபாய் கிடைக்கிறது. ஒரு டன் நல்ல தேங்காய், 63 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. இதனால், விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும்.
இதற்கிடையில், இடைத்தரகர்கள் சிண்டிகேட் போட்டு விலையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தாண்டு கொப்பரை கொள்முதல் செய்ய அரசு காலதாமதம் செய்தது. அதுபோல் இல்லாமல், இந்தாண்டு உடனடியாக கொப்பரை கொள்முதலை அரசு துவக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.