/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண் பரிசோதனை முகாம் பங்கேற்க அழைப்பு
/
கண் பரிசோதனை முகாம் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூன் 24, 2025 10:22 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடபுதூர் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை (26ம் தேதி) நடக்கிறது. ஊராட்சி சுய உதவிக்குழு கட்டட வளாகத்தில், காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.
இதில், கண்புரை, கண்நீர் அழுத்த நோய் மற்றும் இதர கண் குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், கண் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களுக்கு, அன்றைய தினமே கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவர். சிகிச்சைக்கு கோவை செல்பவர்கள் மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஜெராக்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
மேலும், முகாமில் பங்கேற்பவர்களுக்கு அந்தந்த ஊராட்சியில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் பெற அந்தந்த ஊராட்சி செயலாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு மற்றும் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.