/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிற்பயிற்சியில் சேர ஆர்வமில்லை! மாணவர்களை தேடும் ஆசிரியர்கள்
/
தொழிற்பயிற்சியில் சேர ஆர்வமில்லை! மாணவர்களை தேடும் ஆசிரியர்கள்
தொழிற்பயிற்சியில் சேர ஆர்வமில்லை! மாணவர்களை தேடும் ஆசிரியர்கள்
தொழிற்பயிற்சியில் சேர ஆர்வமில்லை! மாணவர்களை தேடும் ஆசிரியர்கள்
ADDED : ஜூன் 24, 2025 10:22 PM

வால்பாறை; வால்பாறையில் உள்ள, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்கள் அலைமோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வால்பாறையில் 2022-23ம் கல்வியாண்டு முதல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ், மெக்கட்ரானிக்ஸ் ஆகிய படிப்பிற்காக கடந்த கல்வியாண்டில், 101 மாணவ, மாணவிகள் படித்தனர்.
இந்நிலையில், இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள, 104 சீட்களுக்கு நேற்று வரை 14 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
இதனால், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய மாணவர்களை தேடி ஆசிரியர்கள் ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளுக்காக சென்று வருகின்றனர். அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் கூறியதாவது: தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி கற்க விரும்புவதால், தொழிற்பயிற்சி நிலையத்தில் அவர்கள் சேர வாய்ப்பு இல்லை.
இருப்பினும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் எதிர்பார்த்த அளவிற்கு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு, கூறினார்.
வாகன வசதியில்லை
வால்பாறையில் 56க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன.
இந்த எஸ்டேட்கள் அனைத்தும் தொலைவில் உள்ளதாலும், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்து காணப்படுவதாலும், தொழிற்பயிற்சி ஆசிரியர்கள் புதிய மாணவர்களை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அரசின் சார்பில், வால்பாறை தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வாகன வசதி ஏற்பாடு செய்தால் மட்டுமே, மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்கின்றனர் தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள்.