/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈரானில் தவித்த ஆடிட்டரை மீட்ட மத்திய அரசுக்கு பெற்றோர் நன்றி
/
ஈரானில் தவித்த ஆடிட்டரை மீட்ட மத்திய அரசுக்கு பெற்றோர் நன்றி
ஈரானில் தவித்த ஆடிட்டரை மீட்ட மத்திய அரசுக்கு பெற்றோர் நன்றி
ஈரானில் தவித்த ஆடிட்டரை மீட்ட மத்திய அரசுக்கு பெற்றோர் நன்றி
ADDED : ஜூன் 24, 2025 12:57 AM
அன்னுார்; கோவை மாவட்டம், அன்னுார், அழகாபுரி நகரை சேர்ந்தவர்கள் விஸ்வநாதன்-அனுராதா தம்பதி. இவர்களுடைய மகன் பிரவீன், 30. இன்னும் திருமணம் ஆகவில்லை. கோவையில் பி.காம்., மற்றும் சி.ஏ., படித்தார். 2023ம் ஆண்டு துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணியில் சேர்ந்தார்.
கடந்த மாதம் அந்த நிறுவன பணிக்காக ஈரானுக்கு அனுப்பப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடக்கிறது. இதனால் அச்சமடைந்த பிரவீன் மற்றும் அவருடன் சேர்ந்த சிலர் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில்,' மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எங்கள் மகன் தவிப்பது குறித்து தகவல் தெரிவித்தோம். இதையடுத்து ஈரான் அரசிடம் பேசி, எந்த இடையூறும் இல்லாமல் விமானம் அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தனர். பாதுகாப்பாக விமான நிலையம் வரை செல்ல உதவினர்.
நேற்று காலை அங்கு புறப்பட்டு, மாலை டெல்லிக்கு பாதுகாப்பாக பிரவீனும் மற்றும் சிலரும் வந்து சேர்ந்தனர். போரினால் எங்களது மகன் குறித்து அச்சத்தில் இருந்தோம். தற்போது மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் பாதுகாப்பாக தாயகம் திரும்பியதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்,' என்றனர்.