/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா திட்டங்களை நடைமுறைப்படுத்த பொள்ளாச்சியை மாவட்டமாக்க வேண்டும்!
/
சுற்றுலா திட்டங்களை நடைமுறைப்படுத்த பொள்ளாச்சியை மாவட்டமாக்க வேண்டும்!
சுற்றுலா திட்டங்களை நடைமுறைப்படுத்த பொள்ளாச்சியை மாவட்டமாக்க வேண்டும்!
சுற்றுலா திட்டங்களை நடைமுறைப்படுத்த பொள்ளாச்சியை மாவட்டமாக்க வேண்டும்!
ADDED : மார் 25, 2025 09:34 PM

வால்பாறை; பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும், என சுற்றுலாமேம்பாட்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியை தலைமையாக கொண்டு, வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய தாலுகாக்கள் உள்ளடங்கிய, மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பல்வேறு அமைப்புக்கள், அரசியல் கட்சியினர், அரசு ஊழியர்கள், பொது நல அமைப்பினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை சுற்றுலா மேம்பாட்டு அமைப்பின் சார்பில், தமிழக முதல்வருக்கு பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க கோரி மனு அனுப்பியுள்ளனர்.
வால்பாறை சுற்றுலாமேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அலி கூறியதாவது:
பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவித்தால் மட்டுமே, வால்பாறையில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்படும். மாவட்டத்தின் ஒரே சுற்றுலா தலமான வால்பாறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் வகையில், பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க வேண்டும். இதன் வாயிலாக, வால்பாறை மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
இவ்வாறு, கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:
வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் ஒன்றான வால்பாறையின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், தமிழக அரசு பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வால்பாறை மக்கள் மாவட்ட கலெக்டரை சந்திக்க வேண்டும் எனில், 100 கி.மீ., துாரம் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், வால்பாறையில் இந்த ஆண்டு நடைபெறும் கோடை விழாவிற்கு முன்னதாக பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.