/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹாக்கியில் அசத்தல் மாணவர்களுக்கு பாராட்டு
/
ஹாக்கியில் அசத்தல் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : அக் 20, 2025 11:48 PM

உடுமலை: மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு பெதப்பம்பட்டி அரசு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தருண்ராஜ், திவாகர், ேஹமபிரசாத், சபரிநாதன், பொன்ராஜ், வேணுதர்ஷன், தனுஸ்ரீ ஆகியோர் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில், திருப்பூர் மாவட்ட அணிக்காக விளையாடினர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலியில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, சிறப்பாக விளையாடிய மாணவர்களை, தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டினர்.

