/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே மேம்பாலப் பணி; வாகன போக்குவரத்து மாற்றம்
/
ரயில்வே மேம்பாலப் பணி; வாகன போக்குவரத்து மாற்றம்
ADDED : செப் 26, 2025 05:47 AM
கோவை; கோவை நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கோட்டம் வாயிலாக, கோவை அவிநாசி சாலையில் இருந்து விளாங்குறிச்சி வழியாக, சரவணம்பட்டி, சத்தியமங்கலம் செல்லும் சாலையில், தண்ணீர் பந்தல் சாலை கடவு எண் 6க்கு மாற்றாக, சிங்காநல்லுார் - பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது.
சரவணம்பட்டியில் இருந்து வரும் வாகனங்கள், தண்ணீர் பந்தல் எஸ் பெண்ட் சந்தில் இருந்து விமான நிலையம், அவிநாசி, திருப்பூர், சேலம் செல்வதற்கு இடது புறமாகவும், பீளமேடு, உக்கடம், காந்திபுரம் செல்லும் வாகனங்கள் வலது புறமாகவும் செல்லும் வகையில் மாற்றுப்பாதை உள்ளது.
அவிநாசி சாலையில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் வாகனங்கள், கொடிசியா, தண்ணீர் பந்தல் வழியாக சரவணம்பட்டி செல்ல வேண்டும் என, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் இந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.