/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்
/
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கமிஷனரிடம் இளம்பெண் புகார்
ADDED : செப் 26, 2025 05:46 AM
கோவை; கோவை, வள்ளுவர் நகர், காமராஜர் ரோட்டை சேர்ந்த அர்ச்சனா பிரியா.23, கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகார் மனு:
மயிலாடுதுறையை சேர்ந்த கிஷோரும், நானும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகினார். திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார். அவர் மீது, காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். கிஷோர் மற்றும் அவரது தந்தையை போலீஸ் ஸ்டேஷன் வரவழைத்து விசாரணை நடத்தினார்.
ஆனால், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், என்னை மிரட்டியதோடு, கிஷோர் மற்றும் அவரது தந்தைக்கு ஆதரவாக செயல்பட்டார். எப்.ஐ. ஆர்., பதிவு செய்ய மறுக்கிறார். புகார் கொடுத்து பல நாட்களாகியும் எப்.ஐ. ஆர்., போடாமல் என்னை அலைக்கழிக்கன்றனர். எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால், தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.