/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளாமரத்துார்-பில்லுார் அணைக்கு தார் சாலை அமைக்க கோரிக்கை
/
விளாமரத்துார்-பில்லுார் அணைக்கு தார் சாலை அமைக்க கோரிக்கை
விளாமரத்துார்-பில்லுார் அணைக்கு தார் சாலை அமைக்க கோரிக்கை
விளாமரத்துார்-பில்லுார் அணைக்கு தார் சாலை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 24, 2025 10:36 PM

மேட்டுப்பாளையம்; பில்லூர் அணைக்கு விளாமரத்தூர், கீழ் செங்கலூர் வழியாக, தார் சாலை அமைக்கக்கோரி, மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லித்துறை, விளாமரத்துார், கீழ்செங்கலுார் வழியாக வனப்பகுதியில், 13 கி.மீட்டர் சென்றால், பில்லுார் அணையை அடையலாம். வனப்பகுதி வழியாக தார் சாலை இல்லை. மண் சாலை வழியாக தனியார் ஜீப்புகள் சென்று வருகின்றன. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, மலைவாழ் மக்கள், மிகுந்த சிரமத்திற்கு இடையே வந்து செல்கின்றனர்.
விளாமரத்துாரில் இருந்து, பில்லுார் அணைக்கு செல்லும் வழியில், ஒரு கிலோ மீட்டருக்கு, 49.80 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைத்து உள்ளனர். இதன் தொடர்ச்சியாக பில்லூர் அணை வரை தார் சாலை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பில்லூர் அணை மற்றும் கீழ் செங்கலூர் மலைவாழ் மக்கள் கூறுகையில், ''பில்லுாரில் இருந்து நாங்கள், 60 கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு, மேட்டுப்பாளையத்திற்கு வேலைக்கு செல்கிறோம். மாலையில் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு செல்ல பஸ் வசதி இல்லை. இரவு, 8:00 மணிக்கு தான் பஸ் உள்ளது. அந்த பஸ்சில் வீட்டிற்கு வந்து சேர, 9:30 மணி ஆகிவிடுகிறது.
எனவே வனப்பகுதியில் மண் சாலையாக உள்ள, ஏழு கிலோமீட்டருக்கு, தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நிதி ஒதுக்கீடு செய்து, தார் சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும். தார் சாலை அமைத்தால், 28 மலைவாழ் கிராம மக்கள் பயன் பெறுவர்,'' என்றனர்.