/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே சுரங்க பாதை; கிராம மக்கள் புகார்
/
ரயில்வே சுரங்க பாதை; கிராம மக்கள் புகார்
ADDED : ஜூன் 24, 2025 10:35 PM
சூலுார்; 'ரயில்வே சுரங்க பாதை அமைத்தால், தங்கள் வீடுகளுக்கு செல்லும் வழித்தடம் பாதிக்கப்படும்,' என, தொட்டிபாளையம் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
சோமனுார் அடுத்த கரவழி மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது தொட்டிபாளையம் கிராமம். இக்கிராமம் வழியாக ரயில் ரோடு செல்கிறது. ரயில்வே கேட் (எண் 120) அருகே 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ரயில்வே கேட்டை அகற்றி விட்டு, அருகிலேயே சுரங்க பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை துவக்கி உள்ளது. சுரங்க பாதை அமைப்பதால், தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும், என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பைக், கார், சிறு சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்க பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், எங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
அதனால், மாற்றுப்பாதை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு, சுரங்க பாதை பணியை செய்யவேண்டும். இதுகுறித்து எம்.பி., ராஜ்குமாரிடம் மனு அளித்துள்ளோம்.
அவர் ரயில்வே அதிகாரிகள் கவனத்துக்கு பிரச்னையை கொண்டு சென்றுள்ளார். நல்ல முடிவு கிடைக்கும் என, எதிர்பார்த்துள்ளோம்,' என்றனர்.