/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரன் குன்று கோவிலில் சூரசம்ஹார விழா
/
குமரன் குன்று கோவிலில் சூரசம்ஹார விழா
ADDED : அக் 20, 2025 09:52 PM
அன்னுார்: குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், சூரசம்ஹார விழா நாளை (22ம் தேதி) துவங்குகிறது.
பிரசித்தி பெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 64வது ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 22ம் தேதி துவங்குகிறது. 22ம் தேதி காலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதலும், இதையடுத்து வேள்வி பூஜையும், முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து, 26ம் தேதி வரை தினமும் வேள்வி பூஜையும், சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது. வரும் 27ம் தேதி காலை 9:00 மணிக்கு கலச பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது.
மாலை 3:30 மணிக்கு முருகப் பெருமான் கிரிவலம் வருதலும், சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. 28ம் தேதி காலை 7:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கருமத்தம்பட்டி - கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில், கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழா, வரும், 22 ம்தேதி காலை, 4:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. 9:00 மணிக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. தினமும், காலை, 9:15 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், 11:00 மணிக்கு, அபிஷேகம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.
வரும், அக்., 27 ம்தேதி மாலை, 4:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், 7:00 மணிக்கு, சூரசம்ஹார விழா நடக்கிறது. 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு தெய்வானை திருக்கல்யாண உற்சவம் துவங்குகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

