ADDED : அக் 20, 2025 09:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: அச்சம்பாளையம், பெரியார் நகரில், பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த செப். 20ம் தேதி துவங்கியது. ஐந்தாவது சனிக்கிழையன்று காலை முதல் மாலை வரை சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு அணிக்கூடை எடுத்தலும், பொங்கல் வைத்தலும் நடந்தது.
நேற்றுமுன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு ராஜ தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் 1,116 தீபங்கள் ஏற்றப்பட்டன. கவாலம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில் சிறப்பு அலங்கார பூஜையும், மதியம் அன்னதானமும், மறு பூஜையும் நடந்தது.

