ADDED : ஜூன் 24, 2025 11:18 PM
ஆன்மிகம்
நாம சங்கீர்த்தனம்
கோதண்டராமர் கோவில், ராம்நகர். விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் n மாலை, 6:00 மணி முதல். நாம சங்கீர்த்தனம் n மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:00 மணி வரை. ஏற்பாடு: சத்யசாயி சேவா நிறுவனங்கள்.
பூச்சாட்டு திருவிழா
மாரியம்மன், மாகாளியம்மன் கோவில், கவுண்டம்பாளையம். அணிக்கூடை அழைத்து வருதல், பொங்கல் வைத்தல் n காலை, 7:00 மணி. திருக்கல்யாணம் n காலை, 11:00 மணி. மாவிளக்கு ஊர்வலம் n மாலை, 3:00 மணி. சிலம்பாட்டம், புலியாட்டம் n மாலை, 4:00 மணி. அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா n மாலை, 6:00 மணி. வான வேடிக்கை n இரவு, 7:00 மணி.
கீதா உபதேசம்
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
கல்வி
சிறப்புரை
டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரி, சிட்ரா n காலை, 10:00 மணி. தலைப்பு: 'உங்கள் கடமை, இப்போதே செய்யுங்கள்'. பங்கேற்பு: புதுடெல்லி, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர்.
தேசிய கருத்தரங்கு
* இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. தலைப்பு: அடுத்த தலைமுறை செயற்கை உறுப்புகள் மற்றும் ஆர்கன் சிப் மைக்ரோ டிவைஸ் தொழில்நுட்பம்.
* ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:30 மணி. தலைப்பு: தொழில்துறை 5.0 வில், ஏ.ஐ.,
முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கோவைப்புதுார் n காலை, 10:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.