/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
/
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஜூன் 24, 2025 11:07 PM

கோவை; ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை காந்திபார்க் பகுதியில், கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் நடந்தது.
'விண்ணுக்கு ஓர் கடிதம்' எனும் பெயரில் நடந்த, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், விமானவியல் கல்வி பயிலும், 40 மாணவர்கள், ஹாப்ஸ் அகாடமியின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக, தாங்கள் எழுதிய கடிதங்களை, ஹீலியம் பலூன்களில் கட்டி பறக்க விட்டனர். ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
விமான ஓட்டி பயிற்சி பெறும் மாணவர் ஷேக் மொய்தீன் கூறுகையில், ''விமான விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரும், அவர்களின் குடும்பத்தின் நம்பிக்கையும், கனவுமாக இருந்தவர்கள். இவ்விபத்தில் தவறுகள் நடந்திருந்தால், அதை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் அதுபோல் நடக்காமல் இருக்க முடிந்த முயற்சிகளை செய்வோம்,'' என்றார்.