/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராட்சத குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் 'கட்'
/
ராட்சத குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் 'கட்'
ADDED : ஜூன் 25, 2025 08:15 AM
கடலுார், : கடலுார் ஜவான்ஸ் பவன் அருகே ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மஞ்சக்குப்பம் பகுதியில் குடிநீர் விநியோகம் தடைபட்டது.
கடலுார் மாநகராட்சியில் மஞ்சக்குப்பம் பகுதிக்கு கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் குடிநீரேற்றும் நிலையம், எய்யலுார் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட இடங்களில் இருந்து போர்வெல் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்படுகிறது. பின், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
திருப்பாதிரிப்புலியூர் ஜவான்ஸ் பவன் அருகே தலைமை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு வரும் பிரதான குழாயில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடியது.
இதன் காரணமாக மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏறாததால் நேற்று காலை அனைத்து பகுதிக்கும் குடிநீர் விநியோகம் தடைப்பட்டது. குறிப்பாக, மஞ்சக்குப்பம், வில்வநகர், சண்முகம் தெரு உட்பட பல தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. மாநகராட்சி மூலமாக வாகனங்களிலும் குடிநீர் விநியோகம் செய்யாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.