ADDED : ஜூன் 25, 2025 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ஏரிமண் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் கொக்காம்பாளையம் கிராமத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டி.என்.61 - ஏ.ஏ., 9898 பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், கொக்காம்பாளையம் ஏரியில் இருந்து ஏரிமண் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து கலர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் அறிவழகன், 21, என்பவரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.