sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தி.மு.க., சேர்மன் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு  

/

தி.மு.க., சேர்மன் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு  

தி.மு.க., சேர்மன் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு  

தி.மு.க., சேர்மன் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு  


ADDED : ஜூன் 25, 2025 08:30 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 08:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த இருதரப்பு தகராறில் தி.மு.க., சேர்மன் மகன் உள்ளிட்ட 5 மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துகுமார் மகன் கார்த்திக்குப்தா,32; இவர் நேற்று முன்தினம் மதியம் பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது வீட்டுமனையை பத்திரப் பதிவு செய்வது தொடர்பாக ஊழியர்களிடம் விவரம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த தொரப்பாடி பேரூராட்சி தி.மு.க., சேர்மன் வனஜா சுந்தரவடிவேல் மகன் ராஜ்குமார்,31; திருத்துறையூர் சுகுதேவ், தொரப்பாடி முருகன் மகன் ரவி ஆகியோர் முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்ததால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ராஜ்குமார், கார்த்திக்குப்தா உட்பட 5 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us
      Arattai