/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.10 லட்சம் மோசடி உரிமையாளர் கைது
/
ரூ.10 லட்சம் மோசடி உரிமையாளர் கைது
ADDED : ஜூன் 25, 2025 08:29 AM

விருத்தாசலம் : விருத்தாலத்தில் டிராக்டர் ஒர்க் ஷாப் உரிமையாளரிடம், ரூ.10 லட்சம் ஏமாற்றிய சிட்பண்ட்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம் கிராமம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ராஜீ, 40; பொன்னேரி புறவழிச்சாலையில் டிராக்டர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இந்நிலையில், இவர் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்த செந்தில்குமார், 46; என்பவர் நடத்தி வரும் ஸ்ரீ பழமலைநாதர் சிட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தில் மாத தவணையாக 40 மாதம் மொத்தம் 10 லட்சம் ரூபாய் பணம் கட்டினார்.
தவணை முடிந்து கட்டிய பணத்தை ராஜீ திருப்பி கேட்டபோது செந்தில்குமார் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20ம் தேதி ராஜீ, மொபைல் போன் மூலமாக பணத்தை திருப்பிக் கேட்ட ராஜீயை, செந்தில்குமார் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து, ராஜீ அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, செந்தில்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.