ADDED : மார் 25, 2025 10:00 PM
கடலுார் : கலெக்டர் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பு:
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் சார்பில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், வேளாண் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கம் பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் துறை சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் கூட்டத்திற்கு வந்து பெயர், கோரிக்கை விவரம் குறித்து காலை 10:00 மணிக்குள் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் கொடுத்தும் கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.