/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊத்துக்காட்டு மாரியம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிஷேகம்
/
ஊத்துக்காட்டு மாரியம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிஷேகம்
ஊத்துக்காட்டு மாரியம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிஷேகம்
ஊத்துக்காட்டு மாரியம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : மார் 25, 2025 09:33 PM
கடலுார் : கடலுார், வண்டிப்பாளையம் ரோடு ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 31ம் தேதி நடக்கிறது.
கடலுார், வண்டிப்பாளையம் ரோடு ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி கணபதி பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி நடக்கிறது. 29ம் தேதி காலை 8:00 மணிக்கு பாடலீஸ்வரர் கோவில் குளத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், யாக சாலை ஸ்தாபனம், மாலை 5:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை, யாக சாலை பிரவேசம் நடக்கிறது. 30ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, 11:00 மணிக்கு பூர்ணாகுதி, அஷ்டபந்தன சமர்ப்பணம், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது.
31ம் தேதி காலை 7:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9:15 மணிக்கு ராஜகோபுரம், விமானங்களுக்கு கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு பரிவார மூலவர், மகா மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.