
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் எம்ஜிஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆங்கில இலக்கிய பேரவை விழா நடந்தது.
ஆங்கிலத் துறை சார்பில் நடந்த விழாவிற்கு கல்லுாரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குநர் சரவணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் அய்யப்ப ராஜா பேசினார்.
விழாவில் துறை தலைவர்கள் சிற்றரசு, பூபாலன், செந்தில்குமார், தேவநாதன், நுாலகர் நடராஜன், ஆங்கிலத்துறை கவுரவ விரிவுரையாளர்கள் பிரேமலதா, விஜயகாந்த், ஆதினேஷ், ராஜ திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
கவுரவ விரிவுரையாளர் மணிமேகலை நன்றி கூறினார.